தமிழக அரசு நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதைக் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
தமிழக அரசு நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதைக் கைவிட கோரி ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதைக் கைவிட வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், பணியில் உயிரிழந்த சாலை பணியாளர்கள் வாரிசுகளுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு , உட்கோட்ட தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைவர் மாரி, மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் சதுரகிரி, மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.

இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் பயாஸ் அகமது, சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா, தமிழ்நாடு அனைத்து ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பாண்டி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்துக்கு இன்று (செப்.,23) மாலை சுமார் ஆறு மணி வரை ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி