சிங்கம்புணரியில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

67பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே சிவகங்கை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சேவியர் தாசை ஆதரித்து தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இந்தத் தேர்தல் ஒரு மகத்தான மாற்றத்தை தர வேண்டும். அந்த மாற்றம் மட்டுமே தீர்வாக அமையும் என்றவர், கஞ்சா மது போதையில் தமிழகம் தத்தளித்து வருவதாகவும் பெண்களுக்கான திட்டத்தை திமுக அரசு முடக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டியவர், காவேரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார். முன்னதாக அனுமதி இன்றி அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையையும், பிளக்ஸ் போனர்களையும் தேர்தல் அதிகாரிகள் அகற்றியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கூட்டம் கலைந்து போகாமல் இருக்க எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று வேடமிட்டவர்களை கொண்டு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி