கோட்டை கருப்பண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா

2543பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோட்டை கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்பத்தூர் நகரில் பழமையான கோயில்களில் அருள்மிகு கோட்டை கருப்பண்ண சுவாமி கோயிலும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில் கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். ஆனால் இங்கு நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக கோயிலில் திருப்பணி தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்து வந்தது.

பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் புதுப்பொலிவுடன் காட்சி அளித்த திருப்பத்தூர் நகரின் காவல் தெய்வமான அருள்மிகு கோட்டை கருப்பண்ண சுவாமி திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 18ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் விழா தொடங்கி பல்வேறு யாக ஹோமங்களை தொடர்ந்து, இன்று ஆறாம் கால யாகபூஜை நடைபெற்றது.

மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயில் கோபுர, விமானங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி