மீன்பிடி திருவிழா - மீன்பிடிக்க வந்தவர்கள் ஏமாற்றம்

67பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சந்திரம்பட்டி கிராமத்தில் உள்ள சிறுகுடி கண்மாயில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் பல மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீன்பிடியாளர்கள், ஊத்தா கூடையுடன் கலந்து கொண்டனர். ஒரு ஊத்தா கூடைக்கு ரூ. 150 கட்டணம் செலுத்தி மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் மீன் பிடிக்க அனுமதி கிடைத்தவுடன், ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் கரையில் இருந்து ஓடி வந்து கண்மாய்க்குள் இறங்கி போட்டிப் போட்டுக் கொண்டு ஊத்தாவை வைத்து மீன் பிடித்தனர். இதில் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வகை மீன்கள் எதுவும் சிக்கவில்லை இருப்பினும், நாட்டு மீன்களான கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, குரவை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. பிடித்த மீன்களை சாக்குப்பைகள், தென்னைநாா் பெட்டிகளில் அடைத்து வீடுகளுக்கு கொண்டு சென்றனர். இந்த மீன்பிடி திருவிழாவில் முதலில் ஊத்தா கூடை மூலம் மட்டுமே மீன்கள் பிடிக்க அனுமதித்தனர். பின்னர் கிராமத்து மக்கள் கண்மாய்க்குள் இறங்கி வலை, பரி, கச்சா, ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டும் மீன்களைப் பிடித்தனர். இன்று பள்ளி விடுமுறை என்பதால் சிறியவர் முதல் முதியவர் வரை கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர். இருப்பினும் ஊத்த கூடை மூலம் மீன் பிடிக்க வந்தவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி