சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், தேவகோட்டை காஸ்மாஸ் லயன் சங்கம், சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் இணைந்து கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் செபாஸ்டியன், முதல்வர் அருட்தந்தை முனைவர் ஜான் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் தர்மராஜ் வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீனிவாசன் பேசியதாவது, மாணாக்கர்கள் மனிதநேயப் பண்புகளுடனும் தொண்டு செய்யும் மனப்பான்மையுடனும் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். நாட்டு நலப்பணித்திட்டத்தில் தொண்டராக இருந்து பல்வேறு சமூக சேவைகளை செய்ய வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். மற்றொரு சிறப்பு விரந்தினராகக் கலந்து கொண்ட, சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கத்தின் பட்டையத் தலைவர் லயன் கணேஷ் அவர்கள், கண்தானத்தின் அவசியத்தை மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து கண் நல பாதுகாப்பு குறித்த படக்காட்சியினைக் காட்டி அதிலிருந்து வினாக்கள் கேட்டு பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கினார்.