சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள தனியார் மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, தகுதியான மனுக்களை பரிசினை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறைகூட்டுறவுத்துறை, சமூகப் பாதுகாப்பு திட்டம் வருவாய்த்துறை, வட்ட வழங்கல் துறை, பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையர் நலத்துறை சார்பில் 130 பயனாளிகளுக்கு ரூ 1. 60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.