சிவகங்கை மாவட்டம் எஸ். புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட போர்வெல் மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 50 மீட்டர் துார பள்ளி கட்டத்தில் இருந்து தாழ்வாக மின் வயர் செல்வதால் மாணவர்கள் அப்பகுதியில் குனிந்து செல்ல வேண்டி உள்ளது.
மின் சப்ளை இருக்கும்போது எதிர்பாராத விதமாக யாராவது ஓடி வந்தால் இந்த வயர்களில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின்சார வயர்களை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.