அதிமுக யூனியன் சேர்மன் தலைமையில் கவுன்சிலர்கள் போராட்டம்

78பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அதிமுக கவுன்சிலர்கள் 6பேரும், திமுக கவுன்சிலர்கள் 2 பேரும், தேமுதிக, காங்கிரஸ், கவுன்சிலர்கள் ஒருவரும் உள்ளனர். சிங்கம்புணரி ஊராட்சியில் கடந்த 4ஆண்டுகளுக்கும் மேலாகியும் எந்த ஒரு வளர்ச்சி பணிக்கும் நிதி ஒதுக்காதாலும் குறிப்பாக வட்டார வளர்ச்சி அதிகாரிகளும் தொடர்ந்து எங்களுக்கு எதிராக செயல்படுவதாலும் இதனால் வார்டு மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாமல் இருப்பதால் இதனை கண்டிக்கும் விதமாக ஊராட்சி அலுவலகம் முன்பு பெண் ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா பிரபு தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 5 பேரும் , திமுக கவுன்சிலர்கள் இரண்டு பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு அதிமுக கவுன்சிலர் வெளியூர் சென்று விட்டதாலும், தேமுதிக கவுன்சிலர் ஒருவர் மட்டும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை இதில் ஆண் ஒன்றிய கவுன்சிலர்கள் நெற்றில் நாமம் போட்டு வாயில் கருப்பு துணி கட்டியும், இதே போல் ஒன்றிய பெருந்தலைவர் திவ்யா பிரபுவும் வாயில் கருப்பு துணி கட்டி தனது குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டர் அதிமுக யூனியன் தலைவருடன் இணைந்து திமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி