குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து புகார் அளிக்கலாம்

78பார்த்தது
குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து புகார் அளிக்கலாம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையரகம் வருகின்ற 19. 04. 2024 அன்று தமிழ்நாட்டில் ஒரு கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்திய தண்டனை சட்டம் 171 B பிரிவின்படி தேர்தல் நடைமுறையின் போது வாக்களிப்பதற்கு எந்தவொரு நபரும் ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கொடுப்பதும் மற்றும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், தண்டனைக்குரிய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது ஒரு வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதுமட்டுமன்றி, இந்திய தண்டனை சட்டம் 171 C பிரிவின்படி வாக்காளர்களைஅச்சுறுத்துதல் மற்றும் மிரட்டும் நபர்கள் மீது ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வாக்களிப்பதற்கு லஞ்சம் பெறும் மற்றும் வாங்கும் நபர்கள், வாக்காளர்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பறக்கும் படை குழுவினரால் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், புகார்கள் குறித்தும் 1800 425 7036 என்ற கட்டணமில்லா இலவச எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது Cvigil செயலி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி