பொதுமக்கள் பங்களிப்புத் தொகை வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தகவல்

64பார்த்தது
2024-2025 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களுக்கு தேவையான கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் “நமக்கு நாமே திட்டத்திற்கு” ரூ. 100கோடி நிதி விடுவித்து தமிழக அரசு – அரசாணை (அரசாணை (நிலை) எண். 64, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, நாள் 15. 03. 2024 மற்றும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும்) வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளிகளுக்கு வகுப்பறை, கழிப்பறை, ஆய்வகங்கள், மிதிவண்டி நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் கட்டுதல், அரசு விடுதிகளுக்கு கட்டிடம் கட்டுதல், விளையாட்டு மைதானங்கள், சாலைத் திட்டு மற்றும் நீரூற்று அமைத்தல், சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதி, சமுதாயக்கூடம் கட்டுதல், பூங்காக்கள், அரசு பள்ளி கட்டிடங்களை புனரமைத்தல், உடற்பயிற்சி ஜிம்னாசியக் கூடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள தனிநபர், குழுக்கள், பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பொதுமக்கள் பங்களிப்பு தொகை வரவேற்கப்படுகிறது. மேலும், எடுத்து செய்யப்படும் பணிகளுக்கான பங்களிப்புத் தொகை (பொது மக்கள் பங்களிப்பாக இருப்பின் மூன்றில் ஒரு பங்கும், பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினர்(ST) குடியிருப்புகளைப் பொறுத்தவரையில் ஐந்தில் ஒரு பங்கும், பங்குத் தொகையாகச் செலுத்தலாம். என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி