சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து ஒடுவன்பட்டி மலைப்பாதை வழியாக பொன்னமராவதிக்கு திருப்பத்தூர் பனிமனை மற்றும் பொன்னமராவதி பனிமனை பேருந்துகள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுகிறது.
ஒடுவன்பட்டி மலைப்பாதையில் தமிழ்நாடு அரசு நகர் பேருந்துகள் செல்லும் போது மலையில் ஏறமுடியாமல் நடந்துனர் பாராங்கல்லை தூக்கி கொண்டு பேருந்து பின்னால் நடந்து சென்ற சம்பவமும், 40 பயணிகளுடன் மலையில் பேருந்தை இயக்க முடியாமல் பயணிகளை இறக்கி விட்டு நடந்து சென்ற சம்பவமும் அரங்கேறியது.
தற்போது மீண்டும் திருப்பத்தூர் பனிமனை பேருந்து சிங்கம்புணரியில் இருந்து பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் அரசு அதிகாரிகள் பொதுமக்களை ஏற்றி கொண்டு பொன்னமராவதி நோக்கி ஒடுவன்பட்டி மலைப்பாதையில் சென்ற போது மலைபாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது. உடனே பேருந்து முன்னே சென்றவிடாமல் இருக்க பேருந்து சக்கரங்களில் பாறாங்கல்லை வைத்து நிறுத்தி வைத்தனர். மூன்று மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலை பகுதியில் பழைய பராமரிப்பு இல்லாத பேருந்தை இயக்குவதால் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பள்ளி மாணவர்கள் அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மலைப்பாதையில் புதிய பேருந்தை இயக்க வேண்டும் என அனைவரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.