தமிழகத்தில் சமீபகாலங்களில் பாணிப்பூரி, காளான், சிக்கன்65 ஆகியவற்றில் ரசாயணம் கலந்த நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் கலப்பதனால் உடலுக்கு பதிப்பு விளைவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில்
சிவகங்கை நகர் ராமச்சந்திரா பூங்கா அருகில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் பிரியாணியில் வேக வைக்காத மட்டன் இறைச்சி பொது மக்களுக்கு வழங்கப்படுவதாக உணவுத்துறை அலுவலர் சரவணகுமாருக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த தனியார் உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டதில்
சரியாக வேகாத மட்டன், ரசாயன நிறமேற்றபட்ட இறைச்சியை கண்டறிந்தறிந்து குப்பையில் கொட்டினர். உணவகத்திற்கான சான்றிதழ் காட்சிபடுதாமை மற்றும் சுகாதரமற்ற சமையலறை, ஆகியவற்றை சரி செய்ய அந்த உணவகத்திற்கு அறிவுறுத்தி ₹3000 அபராதம் விதித்தார். மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகளும் அந்த உணவகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.