பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த 11 புதிய அரசு பேருந்துகள்

72பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில், சிவகங்கை மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ள 11 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென, திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டது , சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ. தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), எஸ். மாங்குடி (காரைக்குடி) முன்னிலையில், அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார் அப்போது அவர் பேசுகையில்
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையான திட்டங்களை தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்தித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆட்சியாளர்களால் ஏற்பட்ட நிதிநிலை நெருக்கடியினை சீர் செய்து, கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்றார். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை பொதுமக்களின் தேவைகள் அறிந்து செயல்படுத்துவது, அரசின் முக்கிய கடமையாகும். இன்றையதினம் 11 புதிய பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி