அடுத்தடுத்து பழுதாகி நின்ற இரு அரசு பேருந்துகள்

50பார்த்தது
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே சிவகங்கையில் இருந்து தேவகோட்டை சென்ற அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தும், தொண்டியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு போக்குவரத்து கழக பேருந்தும் அடுத்தடுத்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இதனால் பேருந்தில் வந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தும் மாற்று பேருந்து வராததால், அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தில் பெண்களும் கல்லூரி மாணவிகளும் ஏறிச் சென்றனர். சிவகங்கை போக்குவரத்து பணிமனையில் போதிய ஊழியர்கள் இல்லாததும், காலி பணியிடங்களை நிரப்பாத காரணத்தால் பேருந்துகளை பராமரிப்பதில் இழுபறி நிலை நீடித்து வருவதாக கூறப்படும் நிலையில், பாதி வழியில் நின்ற அரசு பேருந்துகளால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவது தொடர்வதை ஆகியுள்ளது. இந்த நிலை நீடித்தால் விபத்துக்கள் ஏற்படுவதுடன், அரசு பேருந்துகளை புறக்கணித்து, தனியார் பேருந்தை நாடிச் சொல்லும் நிலை அதிகரிக்கும். எனவே தமிழக அரசும், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும், உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் பெயிண்ட் பண்ண தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி