பொறியாளரை தாக்க முயற்சித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

51பார்த்தது
சிவகங்கை அருகே உள்ள கோவானூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி ஹேமலதா ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் சுமார் பத்து லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இன்று
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முருகன் சிவகங்கை யூனியன் அலுவலகத்தில் பணி புரியும் பெண் உதவி பொறியாளர் கிருஷ்ணகுமாரி என்பவரிடம் அந்த சாலை அமைத்ததற்கு பில் வழங்கும்படி கேட்டுள்ளார் அதற்கு உதவி பொறியாளர் அந்த சாலைக்கு அரசு சார்பில் எந்த ஒரு டெண்டரும் விடப்படவில்லை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை நீங்களாகவே சாலை அமைத்துக் கொண்டு பில் கேட்டால் எப்படி தர முடியும் என்று கேட்டுள்ளார் இதில் ஆத்திரமடைந்த முருகன் கிருஷ்ணகுமாரியை அவதூறாக பேசி அருகில் இருந்த இரும்புச் சேரால் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் பொறியாளருக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் இன்று மதியம் சுமார் மூன்று முப்பது மணியளவில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி