போலி ஆவணம் மூலம் நில மோசடி விஏஓ உட்பட 5 பேர் மீது வழக்கு

3657பார்த்தது
மதுரை மாவட்டம் பழங்காநத்ததைச் சேர்ந்தவர் கையிலைநாதன் (52). இவரது சகோதரர் சேதுநாதன் (62) சென்னை வலரசவாக்கத்தில் உள்ளார். இவர்களது பூர்வீக சொத்து சிவகங்கை அருகே அரசனி பகுதியில் உள்ளது.

இந்நிலையில் சேதுநாதன் தனது சகோதரர்களுக்கு தெரியாமல் போலி ஆவணம் தயாரித்து அந்த இடத்தை தனது மகள் ஐஸ்வரியா (30) பெயருக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கையிலைநாதன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6 மணி அளவில் அளித்த புகாரின்பேரில் சேதுநாதன், அவரது மகள் ஐஸ்வரியா மற்றும் உடந்தையாக இருந்த அரசனி கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி உட்பட 5 பேர் மீது சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி