மருத்துவமனை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
மருத்துவமனை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரசு வேலை வாய்ப்பக பணிமூப்பு அடிப்படையில் இனசுழற்சி முறை பின்பற்றப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட காலமுறை ஊதியப் பணியிடங்களில் அரசு விதிகளின்படி தினக்கூலி அடிப்படையில் முறையாக பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க 2018 -ஆம் ஆண்டில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் அரசுக்கு கருத்துருவுக்கு அரசு சுகாதாரத்துறை செயலர் அதற்கு ஒப்புதல் வழங்கி நிதித்துறைக்கு பரிந்துரை செய்து விட்ட நிலையில், அந்தக் கோப்பு மீது எந்த முடிவும் எடுக்கப்படாத நிலை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முதல் கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்க மாநிலத்தலைவர் லெ. ரெங்காதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் எம். மூவேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலர் டி. ஸ்ரீதர்ராஜ் வரவேற்றார்.
கோரிக்கையை விளக்கி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத்தலைவர் ப. குமார், சிவகங்கை மாவட்டத்தலைவர் க. மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி