சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிற்சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டினர். மாவட்டத் தலைவர் மணியம்மா, மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பினை உடனடியாக துவங்க வேண்டும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தினசரி கூலி 600 ரூபாய் வழங்கிடவும், 200 நாட்கள் வேலை வாய்ப்பை உயர்த்தி வழங்கிடவும், 60 வயது நிறைவு பெற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ 3000 பென்ஷன் வழங்குதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர் எழுப்பினர்.