சிவகங்கையில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

3648பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியில் உள்ள ஆவரங்காடு சமுதாயக்கூடம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர்ஹரி கிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஹரிகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் ஜெகதீஷ் என்பவர் விற்பனைக்காக 10 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் ஜெகதீசை கைது செய்து அவரிடமிருந்த 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி