மகளிர் கல்லூரியில் 748 இடங்களுக்கு 10, 082 பேர் விண்ணப்பம்

79பார்த்தது
சிவகங்கை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை பிரிவுகளில் மொத்தமுள்ள 748 இடங்களுக்கு 10, 082 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் சேர மாணவிகள் ஆர்வம்.
இக்கல்லூரியில் 2024-2025- ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் கட்ட கலந்தாய்வின் மூலம் மாணவிகள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல், மனையியல்(ஹோம் சயின்ஸ்) ஆகிய பாடப்பிரிவுகளுக்காக திங்கள்கிழமை கலந்தாய்வு நடத்தி தகுதியுள்ள மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை வணிகவியல் (பிகாம்), வர்த்தக(பிபிஏ) நிர்வாகவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடத்தி தகுதியான மாணவிகள் சேர்வு செய்யப்பட்டனர்.
இக்கல்லூரியில், மாற்றுத்திறனாளி, விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், தேசியமாணவர் படை, பாதுகாப்பு படையினர், அந்தமான் & நிகோபர் ஆகிய சிறப்பு ஒதுக்கீடு பிரிவுகளுக்காக மொத்தம் 181 பேர் விண்ணப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி