சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கேகே பள்ளம் குரூப் சர்வே எண் 287 உள்ள களம் மற்றும் கால்வாய் வழியாக மழைக்காலங்களில் சேகரமாகும் மழை நீர் உடப்பங்குளம் செய்யாலூர், கேகே பள்ளம் விளாக்குளம், பீக்குளம் ஆகிய ஐந்து கிராமக் கண்மாய்களுக்கு நீராதாரமாக உள்ளது மேலும் 350 ஏக்கர் பரப்பளவு பாசன விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன இந்நிலையில் இந்த கால்வாய்கள் மற்றும் களம் அமைந்துள்ள பகுதியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரங்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் கால்வாய் உள்ள பகுதியில் கால்வாயை அடைத்தும் உள்ளதால் மேற்கண்ட கிராமங்களுக்கு தண்ணீர் வராமல் உள்ளது. மேலும் கால்வாய் மற்றும் களம் அமைந்துள்ள பகுதிகளை சுற்றி சட்ட விரோதமாக வேலியும் அமைத்துள்ளனர். இதனைக் கண்டித்து மேற்கண்ட கிராம மக்கள் மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி கோரிக்கை மனுவை தாசில்தார் கிருஷ்ணகுமார் இடம் வழங்கினர் இதை எடுத்து தாசில்தார் விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து இன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் கலைந்து சென்றனர்.