வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு

81பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள நரிக்குடி சந்திப்பு சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வெள்ளை கரை பகுதியைச் சேர்ந்த வெள்ளைக்கருப்பு மகன் நாராயணன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் தண்டலிங்கம் திருப்புவனம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் கருப்புசாமி ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற மேக்ஸ் கப் வேன் இவர்களின் இருசக்கரவாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது இந்த விபத்தில் காயமடைந்த தண்டலிங்கம் நாராயணன் கருப்புசாமி ஆகிய மூன்று பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்புவன அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தண்டலிங்கம் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார் மேலும் நாராயணன் கருப்புசாமி ஆகிய இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விபத்து குறித்து தண்டலிங்கத்தின் மனைவி லட்சுமி
திருப்புவன காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி