7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வைகாசி திருவிழா

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே கானூர் பெரியநாச்சியம்மன் கோயிலில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் வைகாசி திருவிழா இன்று நடந்தது. கானூர், புல்வாய்கரை, வேம்பத்தூர், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட கிராமமக்கள் கானூர் பெரியநாச்சி அம்மனை வழிபடுகின்றனர். கானூர் பெரியநாச்சி அம்மன் கோயிலில் கானூர், கல்லூரணி, புல்வாய்க்கரை, வேம்பத்தூர், திருப்பாச்சேத்தி, ஒக்கப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து ஏழு வருடங்களுக்கு ஒரு முறை களரி திருவிழா நடத்துவது வழக்கம், இந்த களரி திருவிழாவிற்காக கானூரில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் நடைபயணமாக (போக வர 80 கி. மீ. , ) மதுரை வரை சென்று அங்கு இருந்து பூஜை பொருட்களை வாங்கி மண்பானையில் நிரப்பி அதனை தலைச்சுமையாக ஊருக்கு கொண்டு வந்து பூஜை செய்து வருகின்றனர். பாரம்பரியம் பாரம்பரியமாக இந்த திருவிழா நடந்து வருகின்றன. இந்தாண்டு திருவிழா கடந்த ஏழாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மதுரையில் இருந்து பூஜை பொருட்களை தலைச்சுமையாக கொண்டு வந்த வைகை ஆற்றில் வைத்த பின் நேற்று மாலை வைகை ஆற்றில் இருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக பெரியநாச்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர். இன்று பூஜை பொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடத்திய பின் அந்த மண் பானையில் கோயில் பொங்கலை வைத்த பின் மற்ற கிராமமக்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி