முனியாண்டி கோவில் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து

3628பார்த்தது
மதுரையில் அமைந்துள்ள இந்திய உணவுக் கழகத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள நுகர்பொருள் வணிக கிடங்கிற்கு சுமார் 22 டன் கோதுமை மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது

அப்போது மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோவில் அருகே லாரி வரும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியேட்டரில் மோதி கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சிறு காயங்களுடன் தப்பினார். இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி