சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள முள்ளியரேந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பொட்டியம்மன் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில், பல லட்சம் செலவில் கோவில் கட்டி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகத்திற்கான விழா நடைபெற்றது.
புதிதாக வைக்கப்படும் அம்மன் சிலையும், கோபுர கலசமும் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக கிராமமுழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், கிராம மக்கள் தலைச் சுமையாக சீர் மற்றும் தேவையான பொருட்களை செண்டை, உடுக்கை மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அடுத்து அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் முள்ளியரேந்தல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.