சாலைக் கிராமத்தில் பா சிதம்பரம் பரபரப்பு பேச்சு

83பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாலைக்கிராமத்தில் அருகே மாநிலங் களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1. 25 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைத்தார். அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்பி, தமிழரசி எம்எல்ஏ ஆகியோர்குத்துவிளக்கேற்றினர். தொடர்ந்து ப. சிதம்பரம் பேசிய தாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 2-ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பாக ரூ. 63, 246 கோடி தரப்படும் என 2021 பிப். 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொடுக்கவில்லை. பணம் தரவில்லை என்றால் பணம் இல்லை என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கு மனது இல்லை. பழைய நாடாளுமன்றம் நன்றாக இருக்கும்போது, பல கோடி ரூபாய் செலவழித்து புதியநாடாளுமன்றத்தை கட்டினர். இந்தியா என்பது 28 மாநிலங்களைக் கொண்டது. ஒரு கண்ணில் வெண் ணெய்யையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைக்க கூடாது.
வாக்களித்த மாநிலங்களுக்கு மட்டுமே ஒதுக்குவேன் என்றுஇருப்பது நாட்டுக்கு பெரிய கேட்டை விளைவிக்கும். மத்திய அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி