நாகமுகுந்தன் குடியில் எம்எல்ஏ பரபரப்பு பேச்சு

75பார்த்தது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நாக முகுந்தன் குடியில் பொது சுகாதாரம்சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம்திட்டத்தின் கீழ்சிறப்பு மருத்துவ முகாம்ஊராட்சி மன்ற தலைவர்தமிழ்ச்செல்வி பாலசுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப மதியரசன் இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜ்முதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமினைமானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் குத்துவிளக்கேற்றி முகாமினை பார்வையிட்டுபொதுமக்கள் அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பற்றி கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது
கிராமபுற மக்களும் இந்த திட்டம் பயன்பெற வேண்டும் என்பதற்காக இத்திட்டம் தமிழக முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் தமிழகத்தை தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை செயல்படுத்தவில்லை. மகளிர்க்கான உரிமையை பெற்று தரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. எந்த திட்டமும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் முதல்வர் முனைப்புடன் செயல்படுகிறர். உரிமை தொகை திட்டம் இன்று தமிழ்நாட்டில் தான் செயல்படுத்தபடுகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது இருந்தாலும் முதல்வர் இத்திட்டத்தை செயப்படுத்தி வருகிறார். இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து கிடைத்திட உங்களின் ஆதரவு என்றும் கிடைக்க வேண்டும் என உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி