சிவகங்கை: காரைக்குடியிலிருந்து கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள அரியக்குடி என்ற ஊரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் அர்ச்சனை செய்து, எழைகளுக்கு அன்னதானம் வழங்கினால், கடன் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக போற்றப்படும் இக்கோயில் சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த ஆலயத்தில் சக்கரத்தாழ்வாரும் அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.