ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சூடியூர் இடையே ரயில் தண்டவாளம் அசையாமல் இருக்க பொருத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கிளிப்புகள் நேற்று ( செப்டம்பர் 16) கழன்று கிடந்தது.
இதுகுறித்து ரயில்வே கீ-மேன் செந்தில்குமார் தகவல் கொடுத்ததை அடுத்து கிளிப்புகள் பொருத்தப்பட்டன. இதனிடையே செந்தில்குமாரை பிடித்து மானாமதுரை ரயில்வே போலீஸார் மதுரைக்கு கொண்டு சென்றனர். அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில். தகவல் சொன்ன ஊழியரை பிடித்து சென்ற போலீஸாரை கண்டித்து மானாமதுரை ரயில்வே காவல் நிலையம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் இன்று (செப்டம்பர் 17) காலை சுமார் 8 மணியளவில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.