கீழடியில் உருளை வடிவ குழாய்கள் வடிகால் கண்டுபிடிப்பு

77பார்த்தது
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில்
சுடுமண்ணாலான உருளைவடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு உறைகளுடன் காணப்படும் இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு சுடுமண் உறையின் நீளம் மற்றும் அகலம் முறையே 36 செ. மீ, 18 செ. மீ ஆகும். தற்பொழுது வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ. மீ நீளம் கொண்டுள்ளது.
5இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்தக் குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடர்ந்து வருவதாக தொல்லியல் துறையினர் இன்று காலை சுமார் 11: 30 மணி அளவில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி