உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

2576பார்த்தது
சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னிட்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை அண்ணன் மற்றும் சிவகங்கை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 22ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 62ஜோடி மாடுகளும் பங்கேற்றன‌. இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 84 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

பெரிய மாட்டுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும் பந்தய எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த பந்தயத்தையும் சாலையின் இருபுறங்களில் சிவகங்கை, முத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி