கராத்தே போட்டியில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள்

545பார்த்தது
கராத்தே போட்டியில் பதக்கங்களைப் பெற்ற வீரர்கள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த வீரா்கள் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றனா். புதுதில்லியில் கடந்த 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மானாமதுரை நாகாா்ஜுன் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளியைச் சோ்ந்த மாணவி பி. ரதீபா, ஆா். கபினேஷ், ஆா். எம். டிவின்ராஜ் ஆகியோா் பயிற்சியாளா் சிவ. நாகாா்ஜுன் தலைமையில் பங்கேற்றனா்.
போட்டியில் பி. ரதீபா கட்டா மற்றும் சண்டைப் பிரிவில் முதலிடங்களைப் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றாா். மேலும் இதே பிரிவில் ஆா். கபினேஷ் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றாா். இதே போல, ஆா். எம். டிவின்ராஜ் கட்டா பிரிவில் முதலிடத்தையும், சண்டைப் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றாா். இவா்களுக்கு போட்டிகளில் வென்ற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மலேசியாவில் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க இந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி