சிப்காட் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 56 விநாயகர் சிலை கரைப்பு

57பார்த்தது
சிவகங்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 346 விநாயகர் சிலைகள் இந்து முன்னணி, பாஜகவினரால் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி விழா என்பது நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு பகுதிகளாக ஒவ்வொரு நாட்களில் விநாயகர் சிலை கரைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டனர்.

அதன்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை , சிப்காட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 56 விநாயகர் சிலைகள் நேற்று(செப்.8) அரசு அறிவித்துள்ள நீர் நிலைகளில் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைக்கப்பட்டன. இந்நிகழ்வின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி