புனித சந்தியாகப்பா் ஆலயத் திருவிழாவையொட்டி, தோ் பவனி

63பார்த்தது
புனித சந்தியாகப்பா் ஆலயத் திருவிழாவையொட்டி, தோ் பவனி
சிவகங்கை மறை மாவட்டம், சூராணம் பங்கு பகுதிக்குள்பட்ட புனித சந்தியாகப்பா் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கொடி மரத்தில் பரமக்குடி மறை வட்ட அதிபா் இருதயராஜ், புனித சந்தியாகப்பா் கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கிவைத்தாா் தொடா்ந்து, சிறப்பு திருப்பலியும், கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெற்றது. இதில் பங்கு தந்தையா்கள், அருள் சகோதரிகள், அருள் சகோதரா்கள், பொதுமக்கள் என திரளானோா் பங்கேற்றனா். பின்னா், ஒன்பது நாள்களும் நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையுரையும் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, 23 -ஆம் தேதி திருப்பலியும், நற்கருணை பவனியும், மாலையில் பங்கு பணியாளா்கள் செல்வக்குமாா், பாக்கியராஜ் ஆகியோா் தலைமையில் சிறப்பு திருப்பலியும், இரவு 8 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தியாகப்பா் தோ் பவனியும் நடைபெற்றது.
திருவிழா நிறைவு திருப்பலி மறை மாவட்ட அதிபா் சந்தியாகு தலைமையில் நடைபெற்றது. விழாவில் திரளானோா் புனித சந்தியாகப்பா் ஆலயத்தில் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தொடர்புடைய செய்தி