சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவருக்கு சிவபாண்டியன் மட்டும் பிரகதீஸ்வரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சிவபாண்டியனுக்கும் பிரகதீஸ்வரனுக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்த நிலையில் அண்ணன் சிவபாண்டியனை தம்பி பிரகதீஸ்வரன் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து தகராறு செய்து பட்டாக்கத்தியால் தலையில் வெட்டி உள்ளார். அப்பொழுது தம்பி கையில் இருந்த பட்டாக்கத்தியை அண்ணன் சிவபாண்டியன் பறித்துக் கொண்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரத்த காயத்துடன் பட்டாக்கத்தியுடன் சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர்கள் மருத்துவர்கள் பயந்து ஓடினர். அதன் பின்பு காவல் துறையினர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை செய்த பொழுது சொத்து பிரச்சனை காரணமாக தனது தம்பி தன்னை வெட்டியதாகவும் அவரிடம் இருந்து பட்டாக்கத்திய பறித்து கொண்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்ததாகவும் சிவபாண்டியன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த பட்டாக்கத்தையே காவல் துறையினர் காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். சிவபாண்டியனுக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.