ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய கோரி மறியல்

52பார்த்தது
தமிழ்நாடுதொடக்கக்கல்விஆசிரியர்இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அரசாணை243ஐ ரத்துசெய்யகோரியும், மாறுதல் கலந்தாய்வைரத்துசெய்ய கோரியும் மாறுதல் கலந்தாய்வுநடக்கும் சிவகங்கை ஒருங்கிணைந்தபள்ளிகல்வி அலுவலகத்தில் மறியல்போராட்டம் நடைபெற்றது. மறியல்போராட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் மதியழகு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் தனபால், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்ட செயலாளர் செல்வகுமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிதிக் காப்பாளர் சிங்கராயர் நன்றி கூறினார். மறியலில் அரசாணை 243 தொடக்கக் கல்வியில் பணியாற்றும் 90 சதவீதம் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். இந்த அரசாணை ஊழல் செய்வதற்கு வழிவகுக்கும். இதனால் மாணவர்கள் மிகப்பெரிய பாதிப்பு அடைவார்கள். எனவே இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்து திருத்திய கலந்தாய்வு பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் பதவி உயர்வு வழங்கிய பின்புதான் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி