சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பகுதியில் இன்று காலை முதல் தொடர்ந்து 3 மணி நேரம் கனமழை பெய்தது இதில் தேவகோட்டை - ராமேஸ்வரம் செல்லும் சாலை, திருப்பத்தூர் சாலை, தியாகிகள் ரோடு உள்ளிட்ட முக்கியசாலைகள் மழைநீரில் மூழ்கியது இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். மேலும் மழைநீர் செல்லும் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டதால்
தலைமை தபால் நிலையம் அலுவலக வளாகத்தில் மழை நீர் புகுந்தது இதனால் தபால் நிலையம் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர் இதே போல மின்சார வாரிய அலுவலகத்தில
மழை நீர் புகுந்தது தேங்கியது. மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தேவகோட்டையில் 3 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர் சாலைகளில் மழைநீர் தேங்கிய சம்பவம் குறித்து அறிந்த தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் நீர் தேங்கி இருந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று நகராட்சி பணியாளர்களை வைத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.