சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சுழல் சங்கம், ஒய்ஸ் மென்ஸ் சங்கம், நந்தினி பெட் கிளினிக் ஆகியவை சாா்பில் வளா்ப்பு நாய்களுக்கு இலவச வெறிநோய் (ரேபிஸ்) தடுப்பூசி செலுத்தும் முகாம் 7 -ஆம் ஆண்டாக பா்மா குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமில் காரைக்குடி நகா், பா்மா குடியிருப்பு, பெரியாா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 184 வளா்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், குடல் புழு நீக்கும் மருந்துகளும், 61 நாய்களுக்கு தோல் நோய்க்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டன.
முகாமுக்கு காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட கால்நடைத் துறை மண்டல இயக்குநா் எஸ். ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்தாா்.