சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமையில் சத்தியமூர்த்தி தெருவில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்ற அச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக அமல்படுத்தி வரும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள் அரசாணையை மதிக்காமல் சிகிச்சைக்கான கட்டணத்தில் 20% முதல் 40% வரை மட்டுமே அனுமதித்து மோசடியில் ஈடுபடுவதைக் கண்டிப்பது.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் IFHRMS முறையில் தாமாகவே மாதந்தோறும் வருமான வரிப் பிடித்தம் செய்யும் முறையைக் கைவிட்டு, பழைய நடைமுறைப்படி வருமான வரி செலுத்திட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஜுன் 13 -ல் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது
2024-2025 -ஆம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வை அரசாணை 243 -ஐ ரத்து செய்து பதவி உயர்வுடன் கூடிய திருத்திய அட்டவணைபடி உடனடியாக நடத்த வேண்டும், விலையில்லா பாட நூல்களை கல்வி துறையே நேரடியாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.