பல்லவன் விரைவு ரயில் பிரேக் பழுதானதால் ஒரு மணி நேரம் தாமதம்

58பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ரயில் நிலையத்தில இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி அதிகாலை 5. 35 மணிக்கு 18 பெட்டிகளுடன் புறப்பட்டு சென்றது. இரயில் பள்ளத்தூர் அருகே செட்டிநாடு பகுதியில் சென்றபோது கடைசி பெட்டிக்கு முதல் பெட்டியில் பிரேக் பைண்டிங் பழுது ஏற்பட்டு அந்தப் பெட்டியில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ஒட்டுநர் உடனடியாக பாதுகாப்பு கருதி அதே பகுதியில் ரயிலை நிறுத்தினார். இதனால் அந்த ரயிலில் பயணித்த பயணிகள் செய்வதறியாது பரிதவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள்
பழுதான பெட்டியில் பழுது நீக்கும் பணி மேற்கொண்டனர். பின்னர் பழுது சரி செய்யப்பட்டு 1 மணி நேர தாமதமாக இரயில் சென்னக்கு புறப்பட்டு சென்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி