சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி பகுதிகளில் சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்தால் தினம் தினம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நகராட்சி கூட்டத்திலும் இது பற்றி கவுன்சிலர்களும் கூறி வந்தனர் பொதுமக்களும் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்து வந்த நிலையில் நகராட்சி நிர்வாகமும் பொது மக்களுக்கு சாலைகளில் மாடுகளை விடக்கூடாது என ஒளி பெருக்கி மூலமாக ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் சென்று தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது மாட்டின் உரிமையாளிடமும் கெஞ்சியும் கூறி உள்ளனர். ஆனால் மாட்டின் உரிமையாளர்கள் பொறுப்பெடுத்தாமல் மீண்டும் மீண்டும் சாலைகளில் மாடுகளை விட்டதால் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் ஆங்காங்கே சாலைகளின் நடுவில் நின்று கொண்டிருந்த மாடுகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் இழுத்து வந்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி உள்ளனர் உரிமையாளர்கள் அபராதம் கட்டி மாடுகளை வீட்டிற்கு கூட்டி செல்லலாம் மீண்டும் மாடுகளை விட்டால் அபராதம் அதிகரித்து விதிக்கப்படும். மூன்றாவது தடவையும் சாலைகளை சுற்றி திரிந்தால் மாடுகள் மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்டும் என எச்சரித்து உள்ளனர்.