சிவகங்கை ஆட்சியராகப் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் பேசுகையில்:
அரசுத்துறை வளாகங்களுக்குள் நடந்த தாக்குதலை தடுக்க வேண்டியது காவல்துறைதான்.
என்றும், பள்ளி மற்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த மக்களுக்கு அச்சம் ஊட்டக்கூடிய தாக்குதலுக்கான விளக்கத்தை அரசு
கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அதானி குழுமம் குறித்த எந்த குற்றச்சாட்டிற்கும் மத்திய அரசு செவி சாய்க்காதது வேதனை அளிப்பதாக தெரிவித்த கார்த்திக் சிதம்பரம்,
அமெரிக்க அரசு நிறுவனமே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதால் மத்திய அரசு அதானி விவகாரத்தில் முழு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதிமுகவை பொறுத்தவரை அக்கட்சியில்
மெகா தலைவர் இல்லாததால் குழப்பம் நிலவுவதாக தெரிவித்தவர் அது இயற்கை தான் என்றும் கூறினார்.