பட்டா வழங்க கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

569பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம்செஞ்சை, சூடாமணிபுரம் உட்பட்ட பகுதிகளில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு இடங்களில் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில்,
குடியிருப்பு இடங்களுக்கு பட்டா வழங்க கோரி, நீண்ட நாட்களாக தொடர்ந்து விண்ணப்பித்தும் பட்டா வழங்கவில்லை என கூறி, உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், இன்று தமிழக மக்கள் மன்றம், நில உரிமை மீட்பு குழு
போன்ற அமைப்புகளுடன் இணைந்து காரைக்குடி ஐந்து விளக்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நிலையில்,
காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி தலைமையிலான
வருவாய் துறையினர் நடத்திய சமரச பேச்சு வார்த்தையை அடுத்து அமைதியாக கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you