சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள நவீன பூங்கா கடந்த 2011 ஆம் ஆண்டு ரூபாய் ஒரு கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி பூங்காவானது கட்டப்பட்டது. அப்போதைய துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் நேரடியாக இந்த பூங்காவை திறந்து வைத்தார். தற்பொழுது திமுகவைச் சேர்ந்தவர் மாநகராட்சியின் மேயராகவும் இருந்து வருகிறார் இந்த பூங்காவை திறந்த போதும் நகர்மன்ற தலைவராக இருந்துள்ளார் அதிக பொருட் செலவில் புல் தரைகள் நடைபாதைகள் குழந்தைகள் விளையாடுவதற்கான மேஜை மற்றும் சறுக்கு தளங்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. தற்பொழுது அனைத்தும் பழுது அடைந்து அந்த பூங்காவானது செயல்படாமல் உள்ளது. இதனை பயன்படுத்தி வந்த நடை பயிற்சியாளர்கள், விளையாட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், நண்பர்களுடன் பேசி மகிழ வரும் முதியவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இந்த பூங்கா பூட்டி கிடப்பதால் பயன்படுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
எனவே காரைக்குடி நகராட்சியை மாநகரட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த பூங்காவை பராமரித்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.