மது போதையில் கள்ளக்காதலி கொலை

84பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் இரண்டு மாதங்களாக
தெருக்களில் சுற்றித்திரிந்து காலி மது பாட்டில் பழைய சாமான்களை சேகரித்து அவற்றை விற்று வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தைச் சேர்ந்தஅமுதா என்ற பெண்ணும் மோகன் என்பவரும் குடும்பத்தைப் பிரிந்து திருமணம் செய்யாமல் சாலை ஓரங்களில் கள்ளக்காதல் வாழ்ந்து வந்தனர். இரவில் இவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர் மேலும் இருவரும் இரவில் சாலையோரங்களில் உள்ள இடங்களில் தங்கி வந்துள்ளனர் நிலையில் பள்ளத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் இருவரும் சேர்ந்து இரவு மது குடித்துள்ளனர்
மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மோகன் அருகில் இருந்த கல்லை எடுத்து அமுதாவின் தலையில் போட்டு கொலை செய்து விட்டு தப்பி தலைமறைவானார் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து அமுதாவுடன் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பஞ்சாயத்து சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை
பள்ளத்தூர் போலீசார் கைது செய்து அமுதாவை ஏன் கொலை செய்தார் என்பது குறித்து பிடிபட்ட மோகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you