சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தளக்காவூரில் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதில் சமத்துவ மக்கள் கட்சியை நிறுவன தலைவர் சரத்துக்குமார் அவரது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்புஅவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது: சொந்த ஊரான தளக்காவூரில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம்
விழா நடந்துள்ளது.
இதில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்றார் மேலும்
வருகின்ற 24ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சி உயர்மட்ட குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுத்து அறிவிப்பு வெளியாகும். அனைவரும் கூட்டணியா? கூட்டணியா? என்றே கேட்கின்றீர்களே தவிர, தனித்து நிற்க மாட்டீர்களா! என்று கேட்க மாட்டேன் என்கிறீர்கள். எங்கே இருக்கப் போகிறீர்கள் என்று கேட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் எந்த கட்சியுடன் கூட்டணி என்று கேட்டால் என்ன சொல்வது என்றார்.