மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்திகை தீபத்தின் போது திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயபாண்டியன், அங்கு கழிவறைக்கு சென்ற 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.