திமுக எம்.பி டி.ஆர்.பாலு சொத்து மதிப்பு தெரிஞ்சிக்கணுமா ?

552பார்த்தது
திமுக எம்.பி டி.ஆர்.பாலு சொத்து மதிப்பு தெரிஞ்சிக்கணுமா ?
நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக எம்பி டிஆர் பாலுவின் சொத்துமதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தனக்கு ரூ.1.46 கோடி கடன் இருப்பதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் மனைவி பொற்கொடிக்கு ரூ.6.60 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டிஆர் பாலு, தனது முதல் மனைவிடம் ஒரு கிலோ தங்கம், 2வது மனைவியிடம் 100 சவரன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.16.31 கோடி என குறிப்பிட்டுள்ள டிஆர் பாலு, தன்னுடைய மனைவிகள் பெயரில் ரூ.23.90 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி