இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை வங்கதேச விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், ஷேக் ஹசீனா இந்தியாவிலேயே இருப்பதாக கூறபடுகிறது. யுஏஇ அல்லது இங்கிலாந்தின் அனுமதி கிடைக்கும் வரை தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி இருப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. வங்கதேச கலவரத்தால் நேற்று (ஆகஸ்ட் 5) பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பி வந்தார்.