ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடித்து வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த படம் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட் தொடர்பான போஸ்டர்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில், படத்தின் மற்றொரு வீடியோ கசிந்துள்ளது. தற்போது ஹெலிகாப்டர் ஒன்று மார்க்கெட் சாலையில் இறங்குவது போல் எடுக்கப்படும் காட்சி வெளியாகியுள்ளது.